பதிவு செய்த நாள்
07
செப்
2019
01:09
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 2ல் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில், 120 இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை, மோகனூர், ப.வேலூர், மொளசி, குமாரபாளையம் காவிரி ஆற்றில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
நாமக்கல்லில், குட்டைமேடு, குளக்கரை, முருகன் கோவில், ஏ.எஸ்.பேட்டை, சாவடித் தெரு உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளை நேற்று 6ம் தேதி கரைப்ப தற்காக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே நிறுத்த ப்பட்டன. மாலை, 3:30க்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, இந்து முன்னணி மாநில செயலாளர் முருகானந்தம் தலைமையில், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.