ஓசூர் விநாயகர் சதுர்த்தி ஐந்தாம் நாளில் பாதுகாப்புடன் 100 சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2019 01:09
ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று 6ம் தேதி நீர்நிலைகளில் கரைக்கப் பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் கடந்த, 2 ல் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை மூன்றாவது நாளில் இருந்து நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
ஐந்தாம் நாளான நேற்று 6ம் தேதி, தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 90 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக மதகொண்டப் பள்ளி பகுதியில், 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், சிலைகள் ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. ஓசூர் உட்கோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த, 10 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று 6ம் தேதி நீர்நிலைகளில் கரைக்க ப்பட்டன. ஓசூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க நாளை கடைசி நாள். அன்றைய நாளில் மொத்தம், 120க்கும் மேற்பட்ட சிலைகள் தர்கா சந்திராம்பிகை ஏரியில் கரைக்கப்படுகிறது.