புவனகிரி: புவனகிரி வாணுவ வைசிய சமூகம் மற்றும் தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில், 94 ம் ஆண்டு ’பிட்டு திருவிழா’ நடந்தது.புவனகிரி, மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வாணுவ வைசிய சமூகம் மற்றும் தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.நேற்று 6ம் தேதி காலை நடந்த 94 ம் ஆண்டு ’பிட்டு திருவிழாவில் மீனாட்சியுடன் தேவபுரீஸ்வரர் எழுந்தருளல், பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்து அபிஷேக ஆராதனை ஆகியவை நடந்தது.
மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பேராசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். தலைவர் முருகதாஸ் வரவேற்றார். மோகன் முன்னிலை வகித்தார். அன்பழகன் ’சிந்தை நிறைந்த சிவன்’ என்ற தலைப்பில் சொற் பொழிவாற்றினார். எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. செயலர் சம்மந்தம் நன்றி கூறினார்.