திருமங்கலம் அருகே சத்யயுக சிருஷ்டி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2019 01:09
திருமங்கலம்:திருமங்கலம் அருகே முக்தி நிலைய வளாகம் சத்ய யுக சிருஷ்டி கோயில் கும்பாபிஷேகம் நாளை 8ம் தேதி காலை 6:45 - 7:45 மணி மற்றும் காலை 10:45 - 11:20 மணி என இரு கட்டங்களாக நடக்கிறது.வசந்த சாய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வெங்கட்ராமன் கூறியதாவது:
கோயில் வளாகத்தில் 108 விக்ரகங்கள் பிரதிஷ்டை மற்றும் 36 கோயில்களின் கும்பாபிஷேகம் நாளை இரு கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நேற்று 6ம் தேதி துவங்கின. கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் வழங்கப்படும்.திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் 5 கி.மீ., துாரத்தில் ராயபாளையம் (டவுன் பஸ் எண் 13) செல்லும் ரோட்டில் முக்தி நிலையம் 500 மீட்டர் துாரத்தில் உள்ளது. யாக சாலை, கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளலாம் என்றார். தொடர்புக்கு 98432 42819.