ஒருநாள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நாயகத்தின் மனைவி ஆயிஷா ஊசியால் துணியைத் தைத்தார். அப்போது ஊசி கை தவறி விழவே, அவரால் எடுக்க முடியவில்லை. அப்போது விளக்கும் அணைய, தரையில் தடவியபடி ஊசியைத் தேடினார். திடீரென ஒரு ஒளி தோன்றவே ஊசி கிடப்பது தெரிந்தது. ஒளி வந்த திசையை பார்த்த போது, அங்கு பேரொளியாக நாயகம் நின்றிருந்தார்.