“வட்டி வாங்கி பிழைப்பவர்களை விபச்சாரம் செய்கிறவர்கள்,” என்கிறார் நபிகள் நாயகம். “நான் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கிறேன், நுாறு ரூபாய்க்கு வருடத்துக்கு 6 ரூபாய் தான்” என்று கூட சொல்லித் தப்பிக்க முடியாது. “எவன் ஒருவன் தனக்கு கிடைத்த வட்டியில் ஒரு காசுக்கு பொருள் வாங்கி சாப்பிட்டாலும் சரி...அந்தப்பாவம் விபச்சாரம் செய்ததற்கு ஒப்பாகும்” என கடுமையாக சொல்கிறார் நாயகம். வட்டி வாங்கும் தொழிலைச் செய்வோருக்கு இந்த அறிவுரை வருத்தம் அளிக்கலாம். வாங்கியதை உரியவர்களிடம் திருப்பிக் கொடுங்கள் அல்லது தர்மம் செய்யுங்கள்.