பதிவு செய்த நாள்
07
செப்
2019
04:09
* செப்.7, ஆவணி 21: நந்த நவமி, கேதார விரதம் ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமி பட்டாபிஷேகம், தங்க பல்லக்கில் பவனி
* செப்.8, ஆவணி 22: முகூர்த்த நாள், மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரை கயிறு மாற்றுதல், தென்காசி, கடையம் விஸ்வநாதர் தெப்பம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, விருதுநகர் சிவன் நந்தி வாகனம், அம்மன் காமதேனு வாகனம்
* செப்.9, ஆவணி 23: ஏகாதசி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகு சட்டசேவை, மாலை தங்கச் சப்பரம், விருதுநகர் சிவன் யானை வாகனம், அம்மன் பூப்பல்லக்கு
* செப்.10, ஆவணி 24: மதுரை மீனாட்சி சொக்கநாதர் விறகு விற்ற திருவிளையாடல், சுவாமி, அம்மன் தங்கச்சப்பரம், விருதுநகர் சிவன் தேர், இரவு ஏகாந்தசேவை, சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, உப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு
* செப்.11, ஆவணி 25: ஓணம், முகூர்த்தநாள், பிரதோஷம், திருவோண விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சட்டதேரில் பவனி, சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, விருதுநகர் சிவன் தீர்த்தம், இரவு சுவாமி, அம்மன் ரிஷபசேவை
* செப்.12, ஆவணி 26: முகூர்த்த நாள், கதளி கவுரி விரதம், நெல்லையப்பர் கோயிலில் சபாபதி அபிஷேகம், குறுக்குத்துறை சுப்பிரமணியர் தேர், சுவாமிமலை முருகன் தங்க கவசம் சாத்தி வைரவேல் தரிசனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் தீர்த்தவாரி, ரிஷப வாகனம்
* செப்.13, ஆவணி 27: அனந்த விரதம், உமா மகேஸ்வர விரதம், பவுர்ணமி பூஜை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம், திருவிடை மருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம், கோவை அவிநாசியப்பர் கோயிலில் பவுர்ணமி பூஜை, அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருபூஜை