ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்ய துணை நிற்பவன், கொலையாளி தப்பிக்க உதவுபவன், பொய் சாட்சி சொல்பவன் ஆகியோர் குறிப்பிட்ட பாவங்களைச் செய்த அக்கிரமக்காரர்களை விட கொடியவர்கள். “ சத்தியத்தை வீழ்த்த துணை போகும் மனிதன் இறைவன் மற்றும் இறைத் தூதரின் பாதுகாப்பிலிருந்து விலக்கப்படுவான்” என்கிறார் நாயகம். இறைவனால் கைவிடப்பட்டவனை யாரும் காப்பாற்ற முடியாது. அவனுக்கு நோய் வந்தால், எந்த மருந்தும் குணப்படுத்தாது. மரணம் வரும் வரை வேதனைத் தீயில் மூழ்குவான். மரணத்துக்கு பின்னும் நரகத்தில் அவதிப்படுவான்.