முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கதையன் கிராமத்தில் தர்மமுனிஸ்வரர் பொங்கல் விழா,வர்ணவாசி அம்மன் முளைப்பாரி திருவிழா நடந்தது. கிராமமக்கள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். முளைக் கொட்டு திண்ணையில் இருந்து பொங்கல் பெட்டியை துாக்கி ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.பின்பு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.அன்ன தானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து தெருவின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஊரணியில் கரைத்தனர்.