குளித்தலை: குளித்தலை அடுத்த, மைலாடி கிராமத்தில் பொது மக்கள் சார்பில் கட்டப்பட்ட ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் (செப்., 7ல்) காலை, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்தகுடம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து, யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மூன்று கால பூஜை செய்து நேற்று (செப்., 8ல்) காலை, 8:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.