பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
கூடலுார்:கூடலுார், பந்தலுாரில் நேற்று (செப்., 8ல்), 220 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து சென்று விசர்ஜனம் செய்யப்பட்டது.
கூடலுாரில் இந்து முன்னணி சார்பில், 48 விநாயகர் சிலைகள் நேற்று (செப்., 8ல்),, நகராட்சி அலுவலகம் அருகே, கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து துவங்கிய ஊர்வலம் இரும்புபாலத்தில் நிறைவு பெற்று, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மாநில செயலாளர் கிஷோர்குமார் துவக்கி வைத்தார். நேற்று காலையில் வி.எச்.பி., சார்பில், 74 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பாண்டியார் -- புன்னம்புழா ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சுப்ரமணி துவக்கி வைத்தார்.நடுவட்டத்தில், 9 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு சென்று டி.ஆர்., பஜார் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
மசினகுடியில், 4 இடங்களில் வைக்கப்பட்ட, விநாயகர் சிலைகள் மரவகண்டி அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.கொட்டும் மழையில் ஊர்வலம்பந்தலு ாரில் இந்து முன்னணி, வி.எச்.பி., இணைந்து வைத்த, 85 விநாயகர் சிலைகள் ரிச்மவுண்ட் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, இந்து எழுச்சி திருவிழா நடத்தப்பட்டது. இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் முரளி வரவேற்றார். கோவை கோட்ட செயலாளர் சதீஷ்குமார், பா.ஜ., நெல்லி யாளம் பொறுப்பாளர் தீபக்ராம் பேசினர்.கொட்டும் மழையில் துவங்கிய ஊர்வலம், நெல்லி யாளம் வழியாக பொன்னானி சென்று, விஷ்ணு கோவில் அருகே ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
இவர்களுடன், கூடலுார் தீயணைப்பு துறையினரும் இணைந்து ஆற்றில் சிலைகளை கரைத் தனர்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, வி.எச்.பி., நிர்வாகிகள் யோகேஸ்வரன், ரமேஷ், செல்வகுமார் தலைமையிலான பொறுப் பாளர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர். போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பந்தலுாரில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மின் தடை ஏற்பட்டது.