சித்தோடு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2019 03:09
பவானி: பவானி அருகே, சித்தோடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக, 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்த நிலையில், நேற்று (செப்., 8ல்) மாலை சிலைகள் அனைத்தும் டிராக்டர், மினி ஆட்டோக்களில், மேளதாள இசையுடன் சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிலைகள் அனைத்தும் மங்களபடித்துறை பகுதியில் கரைக்கப்பட்டது.