பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
கிருஷ்ணகிரி: முகரம் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நேற்று (செப்., 8ல்) நடந்தது. அதன்படி நேற்று (செப்., 8ல்) மதியம், 3:00 மணிக்கு, கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கள் உடம்பை கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கீறியபடியும், அடித்துக் கொண்டும் ரத்தம் சொட்ட, சொட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்று, தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.