பள்ளிபாளையம் கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள ஆற்றுநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2019 03:09
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றோர கோவில் வளாகத்தில் புகுந்துள்ள தண்ணீர், மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளன. அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பள்ளிபாளையம் ஆற்றோரத்தில், ஜனதாநகர், பாவடிதெரு, முருகன் கோவில், பெரி யார்நகர், அக்ரஹாரம் மற்றும் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையை தொட்டுக் கொண்டு தண்ணீர் செல்கிறது. ஆற்றோர கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர், மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.