அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் வருடாபிஷேகம் நடந்தது. அப்பகுதி பெண் பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி கொண்டதோடு, ஆயிரத்து 8 பால்குடம் எடுத்தும்,முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். சாய்பாபா சிலைக்கு அபிஷேகம் நடந்தது. விழாவை யொட்டி சென்னை அம்பத்துார் சாய்பாபா பவுண்டஷேன் குழுவினரின் பக்தி பாடல்கள், அக்கரைபட்டி ஸ்ரீ பாண்டுரெங்க சாய் பஜனை குழுவினர், விளாத்திகுளம் சாய சூரிய நாராயணன் குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பந்தல்குடி ஸ்ரீ சாய்ராம் டிரஸ்ட் நிறுவனர் சுந்தரமூர்த்தி, சாய் சுப்புலட்சுமி மற்றும் விழா குழுவினர் செய்தனர்.