திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.கடந்த ஆடி மாதம் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் காணிக்கை பணம், நகைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதற்காக 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். பரமக்குடி அறநிலைய உதவிகமிஷனர் சிவலிங்கம், மடப்புரம் உதவி கமிஷனர் செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள 9 உண்டியல்களில் இருந்து ரூ.32 லட்சத்து 99 ஆயிரத்து 694 மற்றும் 350 கிராம் தங்கம், 322 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை தான் உண்டியலில் இக்காணிக்கை கிடைக்கும். இந்த ஆண்டு இரண்டே மாதங்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால், காணிக்கையும் அதிகரித்துள்ளது.