பதிவு செய்த நாள்
10
செப்
2019
02:09
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த தே. புடையூர் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி உடனா கிய பசுபதீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், 12ம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு, நேற்று (செப்., 9ல்) காலை 9:00 மணியளவில் விக்னேஷ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் நடந்தது.
இதில், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், முன்னாள் சேர்மன் சுந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை எழுத்தர் கொளஞ்சி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இன்று (செப்., 10ல்) காலை 9:00 மணியளவில் அங்குரார்ப்பணம், மாலை 5:00 மணியளவில் திருமுறை பாராயணம், மாலை 6:00 மணியளவில் கும்ப அலங்காரம் நடக்கிறது.
நாளை 11ம் தேதி காலை 8:30 மணியளவில், இரண்டாம் காலை யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, நடக்கிறது. தொடர்ந்து, திரவிய ஹோமங்கள் மஹா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.வரும் 12ம் தேதி காலை 8:30 மணிக்கு, திருமுதுகுன்றம் குமாரதேவர் மடம் 24வது குருமகா சந்நிதானம் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நான்காம் கால மகா தீபாரா தனை நடக்கிறது. 9:00 மணியளவில் கடம் புறப்பாடு, 9:30 மணியளவில் விமான கும்பாபிஷேக மும், 10:30 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.