விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2019 02:09
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.ஆவணி மூலம் நட்சத்திரத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (செப்., 8ல்) காலை, ஆழத்து விநாயகர், அம்பாள், சண்முக சுப்ர மணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சுவாமி மணிமுக்தாற்றங்கரைக்கு சென்று, பிட்டுக்கு மண் சுமக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.