பதிவு செய்த நாள்
10
செப்
2019
03:09
கம்மாபுரம்: கம்மாபுரம் பகுதியிலுள்ள கோவில்களில், விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
கம்மாபுரம் அடுத்த தேவங்குடி கோதண்டராமன் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி, 7ம் தேதி பகல் 2:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ.பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி முதற் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 8ல்)அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, பிம்பசுத்தி, காலை 7:30 மணியளவில் கடம்புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல், விளக்கப்பாடி சாமூண்டீஸ்வரியம்மன் கோவிலில் காலை 8:00 மணிக்கு கும்பாபிஷேகமும், கோ.மாவிடந்தல் பெரியாண்டவர் கோவிலில், காலை 8:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.