பதிவு செய்த நாள்
10
செப்
2019
03:09
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் திருப்பவித்ரோத்ஸ்வ விழா, நேற்று 9ம் தேதி மாலை துவங்கியது.
பல்வேறு பூஜைகளுக்குப் பின், இரவு, 10:00 மணிக்கு, மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி தீபாரா தனையுடன், முதல்நாள் விழா முடிவடைந்தது. இன்று 10ம் தேதி காலை, 7:35 மணிக்கு, மஹா சாந்தி ஹோமத்துடன் இரண்டாம் நாள் உற்சவம் துவங்குகிறது. மூன்றாம் நாளான நாளை 11ம் தேதி, காலை, அக்னி பிரணயனத்துடன் துவங்கி, பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. பூஷ்பா ஞ்சலி உள்ளிட்ட சிறப்பு பூஜைக்குப் பின், திருப்பிவித்ரோத்ஸவம் பூஜை நிறைவடைகிறது.