காரியாபட்டி: காரியாபட்டி தோணுகால் மாந்தோப்பு விலக்கில் அசேபா நந்தவன வளாகத்தில் அன்னபூரணிக்கு தனி சன்னதியுடன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பல்வேறு பூஜைகள் முடிந்து புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கும்பாபி ஷேகம், மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டம் திருஈங்கோய்மலை, ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம், வித்யாம்பா சரஸ்வதி ஆசியுடன் யோகினியர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை அசேபா குழும தலைவர் லோகநாதன் மற்றும் ஆலய திருப்பணி க்குழுவினர் செய்திருந்தனர்.