பதிவு செய்த நாள்
12
செப்
2019
03:09
தேனி: கோட்டூரில் சவுந்தர்யநாயகி சமேத மல்லிங்கேஷ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தேனி அருகே கோட்டூரில் சவுந்தர்ய நாயகி சமேத மல்லிங்கேஸ்வரர் கோயில் செப்பனிப்பட்டு, விக்ரஹங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா துவங் கியது.முதல்நாளில் விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ஹோமம் , கோபூஜை, தீபாராதனையுடன் துவங்கியது.
மறுநாள் இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக பூஜைகள் வேதபாராயணம், தீபாராதனை நடத்தி இரவு யந்திர பிரதிஷ்டை கலச ஸ்தாபனம் செய்து நேற்று 11 ம் தேதிகாலை நான்காம் கால யாக பூஜைகள் துவங்கின.கலசபூஜை, சூரிய பூஜை, கடம்புறப்பாட்டிற்கு பின் சுவாமி, அம்பாள் விமானங்களுக்கு கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாரா தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை திருப்பணி பொறுப்பாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன்ரமணி, ஊராட்சி உறுப்பினர் பாலையா, தலைமையாசிரியர் ராதா, கோயில் டிரஸ்டி ராமலட்சுமி , ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் முருகேசன், முன்னாள் வி.ஏ.ஓ., மூர்த்தி, கோபிநாதன், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் கேசவராஜா, பொருளாளர் வேலுச்சாமி செய்தனர். அன்னதானம் நடந்தது.