பதிவு செய்த நாள்
12
செப்
2019
03:09
ஒட்டன்சத்திரம்: நாகணம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர், மஹாகணபதி, காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முனியப்பசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ஹோமமம், தன பூஜை நடந்தது. அன்று மாலை தீர்த்தக்காவடி முளைப்பாரி ழைத்து வரப்பட்டது. அன்றிரவு கும்ப அலங்காரம், முதற்கால யாக வேள்வி நடந்தது.
2ம் நாளை காலை விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக வேள்வி நடந்தது. நேற்று கோபூஜை, பிம்பசுத்தி, லட்சுமி பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்களால், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.