வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேர் கூடாரம் பொருத்தும் பணி பல நாட்கள் தாமதத்திற்கு பின்னர் நேற்று (செப்., 11ல்) நடந்தது.
இக்கோயிலில் ஆடி மாதத்தில் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சிறப்பு அம்சமாக தேரோட்டம் நடக்கிறது. இதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த தேர் 70 ஆண்டுகள் பழமையானது.
இதனால் உள்ளூர் பிரமுகர்கள் முயற்சியில், பொது மக்கள் பங்களிப்புடன் இரும்பு தாமிரம் அச்சில், தேக்கு, இலுப்பை, நாவல் மரங்களை கொண்டு புதிய தேர் உருவாக்க ப்பட்டது.
வெயில் மழையால் தேர் பாதிப்பு ஏற்படாதபடி உயரமான கூடார அமைப்பு ரூ. 2.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை மற்றும் 4 பக்கங்களிலும் இரும்பு ஸ்டீல் தகடு கள் கொண்டு அடைக்கப்படுகிறது.
ஒவ்வொரு திருவிழாவின் போதும் இவை கழற்றப்பட்டு தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் பொருத்த ரூ.35 ஆயிரம் செலவாகிறது. இச்செலவை தேர் அலங்கார குழுவினர் ஆண்டு தோறும் ஏற்று கொள்கின்றனர். நடப்பாண்டு தேரோட்டம் ஆக. 15ல் முடிந்த நிலையில் வழக் கத்திற்கு மாறாக பல நாட்கள் தாமதமாக நேற்று (செப்., 11ல்) தேர் கூடாரம் மீண்டும் பொருத் தப்பட்டது.