பதிவு செய்த நாள்
12
செப்
2019
04:09
சாயல்குடி:சாயல்குடியில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.-ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையதும், பழமையும், புரதான சிறப்பும் பெற்றதாக சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.முழுவதும் கருங்கற்களால் கட்டப் பட்டு அர்த்த மண்டபத்துடன் கோயில் காணப்பட்டது.
பாண்டிய மன்னர்களின் பிரசித்தி பெற்ற 14 கோயில்களில் 4வது ஸ்தலம். ஆப்ப நாட்டில் 448 கிராமங்களை உள்ளடக்கியது. கடந்தாண்டு பழைய கோயிலை அகற்றி விட்டு அதே இடத்தில் புதியதாக பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. புதியதாக விமான கலசங்க ளுடன் பரிவார தெய்வங்களுக்கு சன்னதிகள் நிர்மாணிக்கப்பட்டது.
இதையடுத்து செப்.,9ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று (செப்., 11ல்) காலை 10:00 மணிக்கு கோயில் சிவச்சாரியார்களால் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
விநாயகர், அங்காள ஈஸ்வரி அம்மன், குருநாதர், முத்து இருளப்ப சுவாமி, அக்னி வீரபுத்திர சுவாமி, கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட புதிய விக்ரகங்களால் ஆன பரிவார தெய்வங்களு க்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு விஷேச தீபாராதனைகள் நடந்தது.
பூஜைகளை டி.எம்.கோட்டை வெங்கடேஷ் குருக்கள் செய்தார். மானாமதுரை ஸ்தபதி சண்மு கம், ஜமீன்தார் சிவஞான பாண்டியன்,ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி, தொழில திபர் மாடசாமி, கோயில் கும்பாபிஷேக விழாக்குழு தலைவர் கருப்பையா, செயலாளர் வில்வ லிங்கம், பொருளாளர் ஆசிரியர் சுந்தரராஜ், தொழிலதிபர் பாண்டி, முத்திருளாண்டி, ஆப்பநாடு மறவர் சங்க துணை தலைவர் முனியசாமி, பார்வர்டு பிளாக் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர் செந்துார்பாண்டியன், சுப்பிரமணி, வில்வலிங்கம், சுமதி எஸ்.சரவணன், போஸ், தட்சிணாமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ராமர், கோயில் கணக்கர் ராமகிருஷ்ணன், ஈஸ்வரன் ஸ்டுடியோ உரிமையாளர் சந்திரன், வீரணன் பூஜாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், முக்குலத்தோர் உறவின்முறை சங்கத்தினர், விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.