பதிவு செய்த நாள்
12
செப்
2019
04:09
உடுமலை: பொட்டையம்பாளையம், வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில், கற்பக விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன், பூமீ நீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் சன்னதிகள் உள்ளன.
கோவில் கும்பாபிஷேக விழா, நேற்றுமுன்தினம் (செப்., 10ல்) அதிகாலை, 5:00 மணிக்கு சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு முளைப்பாரி எடுத்து செல்லுதல், இரவு, 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தன.நேற்று 11 ல் காலை, 6:30 மணிக்கு வேதபாராயணமும், சீனிவாசா பெருமாளுக்கு காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.