பதிவு செய்த நாள்
12
செப்
2019
04:09
வேப்பூர்: தேவஸ்தான புடையூரில் பசுபதீஸ்வர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. வேப்பூர் அடுத்த தேவஸ்தான புடையூரில் 1,200 ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனாகிய பசுபதீஸ்வர் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 9ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் பூஜைகளும், 10ம் தேதி அங்குரார்பணம், திருமுறைபாராயணம், கும்ப அலங்காரமும், 11ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள், மகா தீபாரதனை நடந்தது.
இன்று காலை 9:00 மணியளவில் விருத்தாசலம், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமையில், தருமை ஆதினம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் காசிவாசி எஜமான் சுவாமிகள், இளவரசு திருஞானசம்பந்த சுவாமிகள், திருமுதுக்குன்றம் குருமகா சன்னிதான ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கடம் புறப்பட்டது. தொடர்ந்து, பசுபதீஸ்வரர், அம்மன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், திருகல்யாண உற்சவம், சுவாமி வீதியுலா நடந்தது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.