பதிவு செய்த நாள்
13
செப்
2019
02:09
காஞ்சிபுரம்:நவராத்திரி விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரத்தில், கொலு பொம்மை தயாரிக் கும் பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நவராத்திரி விழா, வரும், 29ல் துவங்குகிறது. விழாவையொட்டி கோவில்களிலும், வீடுகளி லும், கொலு வைக்கப்படும்.இதற்காக, சின்ன காஞ்சி புரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல தலைமுறைகளாக, கொலு பொம்மை தயாரி க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, சின்னகாஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த, சி.கோபிநாத் கூறியதாவது:அத்தி வரதர் வைபவம் நடந்தபோது, இப்பகுதியில், வாகனங்களை, போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், பொம்மை தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்கள் எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், அடையாள அட்டை இல்லாததால், பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களையும், தெருவில் அனுமதிக்கவில்லை.இதனால், இந்தாண்டு, 60 சதவீத பொம்மை மட்டுமே தயாரித் துள்ளோம். இருப்பினும், அத்தி வரதர் வைபவம் நடந்த நாட்களில், அத்தி வரதர் சயன கோலம் மற்றும் நின்ற கோலம் பொம்மை விற்பனை திருப்திகரமாக இருந்தது.ஆண்டுதோறும், புது விதமான பொம்மை அறிமுகம் செய்து வருகிறோம். இந்தாண்டு, 108 திவ்யதேசங்களில், விண்ணுலகத்தில் உள்ள, 108வது திவ்யதேசமான, பரமபதநாதர், புற்றுமாரியம்மன், காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் பொம்மையை அறிமுகம் செய்துள்ளோம்.
கொலு பொம்மை வாங்க வருவோர் அனைவருமே, அத்திவரதர் பொம்மையை வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.