பதிவு செய்த நாள்
13
செப்
2019
02:09
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள செட்டியக்காபாளையம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 16ம் தேதி நடக்கிறது.
செட்டியக்காபாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் புதுபிக்கப்பட்டு, கோபுரம் மற்றும் முன்மண்டபத்திற்கு வர்ணம் பூசப்பட்டது. வரும், 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, 15ம் தேதி, மதியம், 2:30 மணிக்கு அனுக்ஞை, மஹா சங்கல்பம், விஷாக்சோன ஆராதனம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு தீப லட்சுமி பூஜை, புணயாஹனாசனம், தனபூஜை, வாஸ்த்து சாந்தி, முதல் கால ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, தீபராதணை நடக்கிறது.இரவு, 9.00 மணிக்கு யந்தரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 16ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால ஹோமம், மஹாபூர்ணாஹீதி நடக்கிறது.காலை, 6:15 முதல், 7:00 மணிக்குள் மூல விமான கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.