பதிவு செய்த நாள்
13
செப்
2019
02:09
மேட்டுப்பாளையம்: காரமடையை அடுத்த பெள்ளாதி சின்னதொட்டிபாளையத்தில், ராமானுஜர், கல்யாண ரெங்கநாயகி சமேத, கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இதன் மகா கும்பாபிஷேக விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது.
நேற்று முன்தினம் காலை, 6:00லிருந்து, 7:00 மணிக்குள், மன்னார்குடி செண்பகமன்னார் செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் தலைமையில், காரமடை அரங்கநாதர் கோவில் வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமி கோபுர கலசங்களுக்கும், மூலவருக்கும், புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தினார். திருக்கோட்டியூர் மாதவன் சுவாமிகள், திருக்குருங்குடி பெரிய நம்பி ஸ்ரீதராச்சார்ய சுவாமிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்தனர். விழாவில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.