கூடலுார்: கூடலுாரில் வேப்பமரத்தை வணங்கி வந்த பக்தர்கள் 60 ஆண்டிற்குப்பின் அங்கு கோயில் கட்டி அம்மன் சிலையை வைத்தனர்.கூடலுார் 4வது வார்டில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் சிலை என எதுவும் இல்லை. கடந்த 60 ஆண்டாக அங்குள்ள வேப்பமரத்தை அம்மனாக பாவித்து வணங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து அம்மன் சிலையை கோயில் கட்டி வைத்து வணங்கத் துவங்கியுள்ளனர். முன்னதாக இச்சிலையை வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இந்த கோயிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.