காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் புறாக்குளம் பகுதியில் செல்வ கணபதி, வில்லியம்மன், பச்சை வாழியம்மன், துர்கை அம்மன், செந்தில் முருகன் கோவில் புனரமைக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா, கடந்த 10ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, வேத பாராயணம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு கோ பூஜை, தன பூஜை, மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு வில்லியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.