பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதுார் ஏழை மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு கணபதி பூஜை மற்றும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மகாலட்சுமி பூஜை, தன பூஜை, கோ பூஜை, 9:30 மணிக்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை, இரவு 7:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து, 10ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை நடந்தது.நேற்று முன்தினம் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், 10:00 மணிக்கு மூலஸ் தான அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதேபோன்று, கல்பட்டு மதுரா நத்தமேடு, சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி முருகன், தர்ம சாஸ்தா ஹரிகரசுதன் ஐயப்பன் கோவிலில் நேற்று 12ம் தேதி காலை 6:00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தனம், வேத பாராயணம், காலை 8:00 மணிக்குமேல் இரண்டாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.