பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
காஞ்சிபுரம்:பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து, ராணுவ கமாண்டர் எச்சரிக்கை விடுத்தும், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், பாதுகாப்பு கேள்விக்குறியாகஉள்ளது.
குஜராத் மாநிலம் அருகே, சர் கீரிக் கடல் பகுதியில், ஆளில்லா படகுகள் சில மீட்கப்பட்டு ள்ளன. இதனால், ’பயங்கரவாதிகள், தென்மாநிலங்களில் ஊடுருவி முகாமிட்டிருக்கலாம். தென்மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்’ என, தென்மண்டல கமாண்டர், லெப்டினென்ட் ஜெனரல், சைனி, இரு தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், ஜமாத் - உல் -முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்த, ஷேக் அசுதுல்லா, 35, என்பவரை, போலீசார், சென்னையில் கைது செய்துள்ளனர். இந்நிலை யில், ஆன்மிக நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், பிரதான கோவிலான வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் கோவிலில், போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வரதராஜ பெருமாள் கோவிலில், அன்னதான கூடம் அருகில், காஞ்சி மாவட்ட காவல் கட்டுப் பாட்டு அறை உள்ளது. அங்கு மட்டுமே, போலீசார் பணியில் உள்ளனர். ஆனால், மேற்கு ராஜ கோபுரம் வழியாக, பக்தர்கள் உள்ளே சென்று வருவதை, யாரும் கண்காணிப்பதில்லை.
காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் நுழைவாயிலில், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தோர் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.’மெட்டல் டிடெக்டர்’ வழியாக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பக்தர்கள் எடுத்து வரும் உடைமைகளை, யாரும் சோதனை செய்வதில்லை.பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில், தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை, மாவட்ட காவல் துறை நிர்வாகம் கண்டு கொண்டதாக தெரியவில்லை என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படு கின்றனர்.