புலால், பூண்டு, வெங்காயம் போன்ற ரஜோ குண உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. ஆண்கள் ஷேவிங், நகம் வெட்டுதல், தலைமுடி வெட்டுதல் ஆகியவை செய்யக்கூடாது. மேலும், புதிய தொழில் தொடங்குதல், வீடு மாறுதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். பித்ருபட்ச காலங்களில் சுத்தமான சைவ உணவையே ஒரு பொழுது உண்ண வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மேற்கண்ட சிறப்புகள் அமையப் பெற்ற பித்ரு பூஜையை ஸ்ரீமந் நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.