திருவாரூர் - கும்பகோணம் சாலையில் உள்ளது தலையாலங்காடு; பாடல் பெற்ற தலம். இங்கே, நடனவனேஸ்வரர் கோயிலின் முன்னுள்ள திருக்குளத்தில் நீராடி. சுவாமிக்கு விளக்கேற்றி நம்பிக்கையுடன் வழிபட, தோல் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. கோவை மாவட்டம் - ஊத்துக்குளியில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது அமணேஸ்வரர் ஆலயம். இங்கே, தமது வாகனமான பெருச்சாளியின் மீது நடனமாடும் கோலத்தில் அருள்கிறார் ஐந்து கரத்தான்!