பதிவு செய்த நாள்
05
ஏப்
2012
11:04
திண்டுக்கல்: திருச்சபைகளின் துவக்கத்தை நினைவுகூரும் புனித வியாழன் திருப்பலி சடங்குகள், கத்தோலிக்க ஆலயங்களில் இன்று நடக்கின்றன. யூதர்களிடம் பிடிபடுவதற்கு முன், சீடர்களுக்கு இறுதி உணவு விருந்தை, இயேசு ஏற்பாடு செய்து, சீடர்களின் பாதங்களை கழுவினார். இதற்கு சீடர்கள் மறுப்பு தெரிவித்தபோது, "தலைவராக இருக்க விரும்புவோர், தனக்கு கீழ் இருப்பவர்களுக்கு தொண்டாற்ற தயங்கக் கூடாது என்பதே இதன் நோக்கம், என்றார். இதையடுத்து சீடர்களை குருக்களாக திருநிலைப்படுத்தினார். இதன் மூலமே திருச்சபைகள் தோன்றின. இதை நினைவுகூரும் வகையில் புனித வியாழன் சடங்குகள், ஆலயங்களில், இன்று நடக்கின்றன. திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில் மாலை 6 மணிக்கு, பிஷப் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் திருப்பலி நடக்கும். இதில் இயேசுவின் சீடர்களை நினைவுபடுத்தும் வகையில், 12 எளியவர்களின் பாதங்களை, பிஷப் கழுவி சுத்தம் செய்வார். பின், திருப்பலி நிறைவேற்றப்படும்.