ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் போலீஸ் குடியிருப்பு அருகே ஆசாரி தெருவில் உள்ள செல்வ முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. முளைப்பாரி விழாவை முன்னிட்டு கூழ் காய்ச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சீனிவாசக ராகவன் சிறப்பு பூஜையை நடத்தினார். செப்., 8ல் மாலை 5:00 மணிக்கு முத்து எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அன்று முதல் தினமும் இரவு பெண்கள் கும்மியும், இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது. செப்., 17 ல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். மாலை 5:00 மணிக்கு கரகம் கட்டுதல், இரவு 9:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. செப்.,18 ல் மாலை 5:00 மணிக்கு முளைப்பாரி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நவபாஷாண கடற்கரையில் கரைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.