திருவாடானை: திருவாடானை, தொண்டியில் சபரிமலை ஐயப்பன் சேவா சங்கம் சார்பில் ரதயாத்திரை வந்தது. திருவாடானை, தொண்டி வழியாக சென்ற இந்த ரதயாத்திரையை ஏராளமான பக்தர்கள் வணங்கினர். சபரிமலை ஐயப்பன் சன்னதி திருவிளக்கில் இருந்து ஐயப்பஜோதி ஏற்றப்பட்டு வந்த ரதத்தில் உள்ள ஐயப்பன் சிலைக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொண்டி, திருவாடானை பா.ஜ., தொண்டர்கள் வரவேற்றனர்.