கிருஷ்ணகிரி அருகே கோவிலில் குடிநீர் வசதி: பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2019 01:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில் மண்மலை மேல் பழமையான பெருமாள் சாமி கோவில் உள்ளது. இக்கோவில் போச்சம்பள்ளி அடுத்த விளங்காமுடி மற்றும் ஒரு சில கிராம மக்களின் குலதெய்வமாக உள்ளது.
பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் கோவிலுக்கு வந்து, குழந்தைகளுக்கு மொட்டை போடுவது வழக்கம். ஜெகதேவி சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களும், இந்த கோவிலுக்கு வருகின்றனர். கோவில் வளாகத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால், அருகில் உள்ள விவசாய கிணற் றிலிருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. இங்கு குடிநீர் வசதிக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.