பேரையூர்: பேரையூர் அருகே பெருங்காமநல்லுாரில் கண்மாயை துார் வாரும் போது பழமை வாய்ந்த சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இங்குள்ள பெரிய கண்மாயில் துார்வாரும் பணி நடந்தது. மண்ணை தோண்டும் போது மகாமுனீஸ்வரர் சிலை, நாகர் சிலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கிராமத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். மேலும் சிலைகள் இருக்கிறதா என கண்மாயின் மற்ற பகுதிகளையும் தோண்டி பார்த்தனர்.