புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத முதல் சனிகிழமையையொட்டி, கோவை ஈச்சனாரி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஐப் பெருமாள் பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் நெசவு நெய்யும் அலங்காரத்திலும், கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு, எல்.ஐ.சி., காலனி ஸ்ரீ சப்தகிரி வேங்கடேஸ்வர பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.