பதிவு செய்த நாள்
21
செப்
2019
12:09
ஈரோடு: மூன்று கோவில் உண்டியல்களில், 4.74 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர், மகிமாலீஸ்வரர் கோவில்களின் உண்டியல்கள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுகிறது.
அதன்படி, நேற்று முன்தினம், 18 பொது உண்டியல்கள், கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. பொது உண்டியல்களில் நான்கு லட்சத்து, 45 ஆயிரத்து, 810 ரூபாய், கோசாலை உண்டியலில், 28 ஆயிரத்து, 840 ரூபாய் என, நான்கு லட்சத்து, 74 ஆயிரத்து, 650 ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கம், 17 கிராம், வெள்ளி, 46 கிராம் செலுத்தப்பட்டிருந்தது.
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த, காணிக்கை எண்ணும் பணியில், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார், செயல் அலுவலர் கங்காதரன், கோவில் பணியாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.