பதிவு செய்த நாள்
21
செப்
2019
12:09
திண்டிவனம் : ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் நடந்த கனகாபிஷேகத்தில், உடுப்பி விஸ்வேந்திர தீர்த்த சுவாமிகள் பங்கேற்றார்.
கர்நாடக மாநிலம், உடுப்பி, பெஜாவர் மடத்தைச் சேர்ந்த விஸ்வேந்திர தீர்த்த சுவாமிகள், பிரசன்ன தீர்த்த சுவாமிகள் ஆகியோர், திண்டிவனம் அடுத்த ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளிக்கு நேற்று வருகை தந்தனர். பள்ளி வளாகத்தில் தாளாளர் முரளி ரகுராமன் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நித்திய அனுஷ்டான பூஜை,சுதர்சன ஹோமம் நடந்தது. விஸ்வேந்திர தீர்த்த சுவாமிக்கு பள்ளி மற்றும் பொதுமக்கள் சார்பில் கனகாபிஷேகம் நடந்தது.
பின்னர் விஸ்வேந்திர தீர்த்த சுவாமிகள், பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பள்ளி மாணவர்கள், பொது மக்களுக்கு ஆசி வழங்கினர். நிகழ்ச்சியில், வானுார் எம்.எலக.ஏ., சக்கரபாணி, ஒன்றிய செயலர்கள் ராமதாஸ், சதீஷ், ஜெ.,பேரவை காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.