பதிவு செய்த நாள்
23
செப்
2019
02:09
புவனகிரி: எம்பெருமனார் தர்சன சபையின், 43ம் ஆண்டு விழா மற்றும் வைணவ மாநாடு புவனகிரியில் நடந்தது.புவனகிரி ஆர்யவைசியாள் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோகு லாச் சாரி ராமானுஜதாசர் தலைமை தாங்கினார். சபையின் இணை செயலர் பாஸ்கர ராமானு ஜர் வரவேற்றார். பரகால ராமானுஜதாசர் கருடக் கொடியை ஏற்றி வைத்தார். கோவிந்த ராஜூலு ஆண்டறிக்கை வாசித்தார்.
’ஊரிலேன் காணிலேன்’ என்ற தலைப்பில் கோகுலாச்சாரி, ’ராமானுஜ நுாற்றந்தாதி’ என்ற தலைப்பில் ராஜமோகன், ’பரம கவிகளின் வேங்கடவன்’ என்ற தலைப்பில் ஹரிப்பிரியா வேங்கடவன், ’கிளியும் இளங்கிளியும்’ என்ற தலைப்பில் டாக்டர் ரங்காச்சாரி சுவாமிகள், ’சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்’ தலைப்பில் டாக்டர் வெங்கடேஷ் சுவாமிகள், ’இரு, பத்து, இரண்டு’ தலைப்பில் ரகுவீரன் சுவாமிகள் பேசினர்.மாநாடு செயல்பாடுகள் குறித்தும் அடுத்த ஆண்டின் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. டாக்டர் அன்பழகன், தமிழ் பேரவை தலைவர் பாஸ்கரன், செயலர் அன்பழகன், துணை தலைவர் கோபால்சாமி, செயலர் ராமநாதன், பொருளாளர் கலியபெருமமாள் சபை தலைவர் கமலக்கணன் சுவாமி நன்றி கூறினார்.