சின்னமனுார்: குச்சனுார் கோயிலில் சுரபி நதியில் துணி சேகரிக்கும் உரிமைக்கான ஏலம் இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இதன் எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி, கொடி மரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபடும் முறையை பக்தர்கள் கடை பிடிக்கின் றனர். நீராடும் போது பக்தர்கள் துணிகளை அவிழ்த்து விடுவர். இதை சேகரித்து அப்புறப்படுத் தும் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்படும். கடந்தாண்டு ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் ஏலம் போனது. இந்தாண்டு இருமுறை ஏலம் அறிவித்தும், யாரும் கேட்க முன்வராததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையினர் கூறுகையில், ’பெரியாறு அணையிலிருந்து ராஜ வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர், சுரபி நதியில் வரும். கடந்தாண்டு 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வரவில்லை. குறிப்பாக ஆடி சனிவார திருவிழா நடைபெறும் போது, தண்ணீர் திறக்கப்படாத தால் எதிர்பார்த்த அளவு துணி சேராததால் ஏலதாரருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்தாண்டும் அதே நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை,’ என்றனர்.