கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் புரட்டாசி மாத பூசத்தையொட்டிஅகவல் பாராய ணம் நடந்தது.நேற்று 23ல், காலை 10:00 மணி முதல் அகவல் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அருட்பா பாடல்களைப் பாடினர். மதியம் 12:00 மணிக்கு திரை நீக்கி ஜோதி தரிசனமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை சத் சங்கச் செயலர் வசந்தராயன், உபயதாரர் முத்துக்குமாரசாமி செய்தனர்.