ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோவில் விழா செப்.,17 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது. செப்.,20ல் திருவிளக்கு பூஜையும், மறு நாள் வாணியக்குடி கிராம இளைஞர்களின் ஒயிலாட்டமும் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று பால்குட விழா நடைபெற்றது. முன்னதாக கைலாச நாதர் கோவிலில் இருந்து பால்குடத்துடன் பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கீழத்தெரு பொதுமக்கள் மற்றும் வ.உ.சி. இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.