பதிவு செய்த நாள்
26
செப்
2019
11:09
போடி: சில்லமரத்துப்பட்டி மகாராஜா சுவாமி கோயிலில் முகூர்த்த கால் நடப்பட்டு, காப்புகட்டுதலுடன் இந்த விழா துவங்கியது. கணபதி ஹோமம், திருவாசகம் படித்தல் உள்ளிட்டவை நடந்தது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பின் சீலக்காரி அம்மன், கன்னிமூல கணபதி, மகாராஜா மயாண்டி சுவாமி, முத்தையா சுவாமிக்கு கொடை பூஜை நடந்தது. இதில் சாதம், காய்கறி, கீரை, முருங்கைக்காய், மீன், சர்க்கரைப் பொங்கல், கிழங்கு வகைகள் என எட்டு வகையான உணவு பொருட்களை படையலாக வைத்தனர். நள்ளிரவில் மாயாண்டி சுடலை ஈஸ்வரருக்கு கடா வெட்டி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து பிரசாத பந்தியும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு நிகழ்ச்சி, பாரிவேட்டை நடந்ததில் சில்லமரத்துப்பட்டி, விசுவாசபுரம், சிலமலை உட்பட சுற்று பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாயாண்டி சுடலை ஈஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.