செத்தவரை: மீனாட்சி உடனுறை சொக்கநாதப் பெருமான் கோவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி தாலுகா செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச பிரதோஷ தினத்தை முன்னிட்டு செஞ்சி திருமுறை கழகம் சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய முற்றோதல் நிகழ்ச்சியை சிவஜோதி மௌன சித்தர் சுவாமிகள் துவக்கிவைத்தார். திருமுறை கழக தலைவர் டாக்டர் ஆத்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் வடிவேலு துணைத் தலைவர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர்கள் வைர சிவகாமி அரிகிருஷ்ணன் கந்தசுவாமி ரங்கநாதன் மற்றும் திருமுறைகழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பகல் 2 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் திருவாசக முற்றோதல் நிறைவடைந்தது.